×

நியூசி.யுடன் முதல் டெஸ்ட் வங்கதேசம் 310/9

சில்ஹெட்: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வங்கதேசம் 9 விக்கெட் இழப்புக்கு 310 ரன் குவித்துள்ளது. சில்ஹெட் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசம் முதல் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 310 ரன் குவித்தது. தொடக்க வீரர் மகமதுல் ஹசன் ஜாய் அதிகபட்சமாக 86 ரன் (166 பந்து, 11 பவுண்டரி) விளாசினார்.

கேப்டன் நஜ்முல் ஷான்டோ, மோமினுல் ஹக் தலா 37 ரன், நூருல் ஹசன் 29, ஷஹாதத் உசேன் 24 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். தைஜுல் இஸ்லாம் 8, ஷோரிபுல் இஸ்லாம் 13 ரன்னுடன் களத்தில் உள்ளனர். நியூசி. பந்துவீச்சில் கிளென் பிலிப்ஸ் 4, ஜேமிசன், அஜாஸ் படேல் தலா 2, ஈஷ் சோதி 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

The post நியூசி.யுடன் முதல் டெஸ்ட் வங்கதேசம் 310/9 appeared first on Dinakaran.

Tags : Newsy ,Bangladesh ,Silhead ,New Zealand ,Dinakaran ,
× RELATED ரூதர்போர்டு, அல்ஜாரி அதிரடியால்...