×

குலசேகரம் அருகே வீட்டில் இருந்து நள்ளிரவில் கையில் பையுடன் வெளியேறிய கல்லூரி மாணவி எங்கே?: துணிமணிகள், சான்றிதழ்களையும் மூட்டை கட்டினார்

குலசேகரம்: குலசேகரம் அருகே வீட்டில் இருந்து நள்ளிரவில் கையில் பையுடன் வெளியே சென்ற கல்லூரி மாணவி எங்கு சென்றார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்டி வருகின்றனர். குலசேகரம் அருகே வெண்டலிக்கோடு பண பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டின் ராஜ். அவரது மனைவி பிரேம கலா (48). இந்த தம்பதிக்கு ஆஸ்லின் (20) என்ற மகளும், ஆஷகேல் (21) என்ற மகனும் உள்ளனர். ஆஸ்லின் நட்டாலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பார்மஸி 2ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த மாணவி, யாரிடமும் சரியாமல் பேசாமல் இருந்துள்ளார்.

இந்தநிலையில் இரவு வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு அவரது அறைக்கு தூங்க சென்றார். பெற்றோரும் தூங்கி விட்டனர். நள்ளிரவில் திடீரென கண்விழித்த மாணவி, தனது துணிமணிகள், கல்லூரி சான்றிதழ் என தனக்கு தேவையான அனைத்தையும் ஒரு பேக்கில் வைத்துள்ளார். பின்னர் பெற்றோர் தூங்கிவிட்டார்களா? என்று நைசாக பார்த்துவிட்டு, வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். மறுநாள் காலை 6 மணிக்கு பிரேம கலா எழுந்து பார்த்தபோது, மகளை காணாமல் அதிர்ச்சியடைந்தார். உடனே வீட்டுக்கு வெளியே சென்றும் தேடி பார்த்தார். ஆனாலும் மாணவி அங்கில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த பிரேம கலா, மகளின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் விசாரித்தார். ஆனாலும் மாணவி பற்றி எந்த தகவலும் இல்லை. இதையடுத்து பிரேம கலா குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி துணி மற்றும் ஆவணங்களை உடன் எடுத்து சென்றிருப்பதால் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு சென்றாரா? அல்லது காதல் விவகாரம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறினாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குலசேகரம் அருகே வீட்டில் இருந்து நள்ளிரவில் கையில் பையுடன் வெளியேறிய கல்லூரி மாணவி எங்கே?: துணிமணிகள், சான்றிதழ்களையும் மூட்டை கட்டினார் appeared first on Dinakaran.

Tags : Kulasekaram ,Dinakaran ,
× RELATED குமரியில் வாட்டி வதைக்கும்...