×

தஞ்சை மாவட்டத்தில் சுற்றுலா தொழில் முனைவோர் உரிமம்பெற விண்ணப்பிக்கலாம்

தஞ்சை: தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தஞ்சை மாவட்டத்தில் சுற்றுலா தொழில் சார்ந்த சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா வழிகாட்டிகள், பயண முகவர்கள், சுற்றுலா போக்குவரத்து ஏற்பாட்டாளர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பதிவுக்கான விண்ணப்பங்கள் www.tntourismtors.com < http://www.tntourismtors.com/ > என்ற இணையதளம் மூலம் பெறலாம். சுற்றுலா தொழில் முனைவோர்கள் முறையான உரிமம் இல்லாமல் சுற்றுலா சார்ந்த தொழில் நடத்துவது சட்டப்படி குற்றமாகும். சுற்றுலா தொழில் முனைவோர்கள் அரசாணையில் உள்ள வழிகாட்டுதல்களை பற்றி அறிந்திருக்க வேண்டும்.

சுற்றுலாத்துறையில் உடனடியாக பதிவு செய்து உரிமம் பெறப்பட வேண்டும். எனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றுலா சார்ந்த தொழிலில் ஈடுபடுவோர் பதிவு செய்வதற்கான இணையதளம் மற்றும் விபரங்கள், மேலும் பதிவுக்கான தகவல்களை அறிந்து கொள்ள தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா அலுவலக தொலைபேசி எண் 04362-230984 மற்றும் தஞ்சை சுற்றுலா அலுவலரின் செல்போன் 9176995873 என்ற எண்களிலோ அல்லது tntotnj@gmail.com < mailto:tntotnj@gmail.com > or tntotnj@yahoo.in < mailto:tntotnj@yahoo.in > என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் தீபக் ஜேக்கப் கேட்டு கொண்டுள்ளார்.

The post தஞ்சை மாவட்டத்தில் சுற்றுலா தொழில் முனைவோர் உரிமம்பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur district ,Tanjore ,Deepak Jacob ,Tanjore district ,Dinakaran ,
× RELATED தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு