×

வாகன தணிக்கையின் மூலம் அரசுக்கு வருவாய் ஈட்டித்தந்த செங்கல்பட்டு கோட்ட நுண்ணறிவு பிரிவு அலுவலர்களுக்கு அமைச்சர் மூர்த்தி பாராட்டு..!!

சென்னை: அரசுக்கு வருவாய் ஈட்டித்தந்த செங்கல்பட்டு கோட்ட நுண்ணறிவு பிரிவு அலுவலர்களுக்கு அமைச்சர் மூர்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார். வாகன தணிக்கையின் மூலம் ரூ.63,52,269 அரசுக்கு வருவாய் ஈட்டித்தந்த செங்கல்பட்டு கோட்ட நுண்ணறிவு பிரிவு அலுவலர்களுக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தலைமையில் இன்று சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் அக்டோபர் 2023ம் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

நேற்று ( நவம்பர் 27 ) அன்று வாகன தணிக்கையின் போது, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட தங்க நகைகளை பறிமுதல் செய்து தண்டத்தொகை ரூ.63,52,269 வசூல் செய்து அரசுக்கு வரிவருவாயை ஈட்டித்தந்த செங்கல்பட்டு கோட்ட நுண்ணறிவுப்பிரிவு சுற்றும்படை அலுவலர்களுக்கு அமைச்சர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள். மேலும், வணிகவரித்துறை திண்டுக்கல் வரிவிதிப்பு வட்டத்தில் பணிபுரிந்து மறைந்த உதவியாளர் திரு. கா. முத்துசாமி அவர்களின் வாரிசுதாரர் மனோகர் என்பவருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையை அமைச்சர் வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசுச்செயலாளர் திருமதி. பா. ஜோதி நிர்மலாசாமி, இ.ஆ.ப.. வணிகவரித்துறை ஆணையர் முனைவர் டி. ஜகந்நாதன், இ.ஆ.ப., இணை ஆணையர் (நிர்வாகம்) திருமதி. வே. இரா. சுப்புலெட்சுமி இ.ஆ.ப. மற்றும் வணிகவரித்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post வாகன தணிக்கையின் மூலம் அரசுக்கு வருவாய் ஈட்டித்தந்த செங்கல்பட்டு கோட்ட நுண்ணறிவு பிரிவு அலுவலர்களுக்கு அமைச்சர் மூர்த்தி பாராட்டு..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Murthy ,Chengalpattu Division ,CHENNAI ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED பதிவுத்துறையில் ஆவணங்கள் பதிவு...