×

‘மார்க் ஆண்டனி’ படத்திற்காக சென்சார் அதிகாரிகள் லஞ்சம் பெற்ற வழக்கில் நடிகர் விஷால், அவரின் மேலாளர் மும்பையில் சிபிஐ விசாரணைக்காக ஆஜர்

மும்பை: மார்க் ஆண்டனி படத்திற்காக சென்சார் அதிகாரிகள் லஞ்சம் பெற்ற வழக்கில் நடிகர் விஷால் சிபிஐ முன் ஆஜரானார். இந்தி பதிப்பிற்கான சென்சாருக்கு அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக விஷால் புகார் எழுப்பிய நிலையில் வழக்கு தொடரப்பட்டது. நடிகர் விஷால் மற்றும் அவரின் மேலாளர் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் மும்பையில் சிபிஐ விசாரணைக்காக ஆஜர் ஆகினர்.

மார்க் ஆண்டனி படத்திற்காக சென்சார் அதிகாரிகள் லஞ்சம் பெற்ற வழக்கில் நடிகர் விஷால் மும்பை சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜரானார்.விஷால் நடிப்பில் செப்.15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த மார்க் ஆண்டனி திரைப்படம் ஹிந்தி மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

மகாராஷ்டிராவில் மார்க் ஆண்டனி படத்தின் டப்பிங், திரைப்படம் வெளியிடுவதற்கு அதிகாரிகள் தன்னிடம் ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும், படம் வெளியாக வேண்டும் என்பதால் இரண்டு பரிவர்த்தனைகளாகக் கேட்ட தொகையைக் கொடுத்ததாகவும் விஷால் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து திரைப்பட தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக நடிகர் விஷால் அளித்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது. லஞ்சம் பெற்ற திரைப்பட தணிக்கைத் துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவும் செய்தது.

இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்திற்காக சென்சார் அதிகாரிகள் லஞ்சம் பெற்ற வழக்கில் நடிகர் விஷால் சிபிஐ முன் ஆஜரானார். இந்தி பதிப்பிற்கான சென்சாருக்கு அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக விஷால் புகார் எழுப்பிய நிலையில் வழக்கு தொடரப்பட்டது. நடிகர் விஷால் மற்றும் அவரின் மேலாளர் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் மும்பையில் சிபிஐ விசாரணைக்காக ஆஜர் ஆகினர்.

The post ‘மார்க் ஆண்டனி’ படத்திற்காக சென்சார் அதிகாரிகள் லஞ்சம் பெற்ற வழக்கில் நடிகர் விஷால், அவரின் மேலாளர் மும்பையில் சிபிஐ விசாரணைக்காக ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Vishal ,CBI ,Mumbai ,CPI ,Dinakaran ,
× RELATED சுரங்க முறைகேடு வழக்கு: அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன்