×

சித்தூர் எஸ்ஆர் புரம் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் பிசி மக்களின் நலனுக்காக துண்டு பிரசார போஸ்டர்

*யாதவ சங்க தலைவர் வெளியிட்டார்

சித்தூர் : சித்தூர் எஸ்ஆர் புறம் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் துண்டு பிரசார போஸ்டரை தெலுங்கு தேசம் கட்சி யாதவ சங்க தலைவர் வெளியிட்டார்.
சித்தூர் மாவட்டம் எஸ்ஆர் புறம் மண்டலம் எஸ்ஆர் புறம் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் கங்காதர நெல்லூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் தாமஸ் தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி யாதவ சங்க மாவட்ட தலைவர் ஸ்ரீதர் பிசி மக்களின் நலனுக்காக துண்டு பிரசார போஸ்டரை நேற்று வெளியிட்டார்.

பின்னர் தெலுங்கு தேச கட்சி யாதவ சங்க மாவட்ட தலைவர் ஸ்ரீதர் பேசியதாவது: ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்றதிலிருந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. அதேபோல் ஆந்திர மாநிலத்தில் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட யாதவ வகுப்பை சேர்ந்த மக்கள் உள்ளார்கள்.

அவர்களின் நலனில் ஆளும் கட்சி அரசு அக்கறை செலுத்தவில்லை. ஆளும் கட்சி அரசு பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வது அவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைப்பது கொலை, கொள்ளை, பலாத்காரம், செம்மரக்கட்டை, கடத்தல் உள்ளிட்ட செயல்கள்தான் அதிகளவு நடைபெற்று வருகிறது.மத்திய அரசு, மாநில அரசுக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்களின் நலனுக்காக நிதி ஒதுக்குகிறது. அந்த நிதியை மாநில அரசு பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக பயன்படுத்தாமல் முதல்வர் ஜெகன்மோகன் தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகளுக்கு பயன்படுத்தி வருகிறது. ஆந்திர மாநிலத்தில் 25 சதவிகிதம் யாதவ வகுப்பை சேர்ந்த மக்கள் இருக்கிறார்கள்.

50 சதவிகிதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்கள் இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்களுக்கு மற்றும் யாதவ வகுப்பை சேர்ந்த மக்களுக்கு எந்த ஒரு நல திட்ட உதவிகளும் செய்வதில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்கள் வீடு இல்லாமலும், வேலை இல்லாமலும், மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

மத்திய அரசு பிற்படுத்தப்பட்ட வகுப்பு சேர்ந்த மக்களின் நலனுக்காக நிதி வழங்குகிறது. அந்த நிதியை பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்களின் நலனுக்கு பயன்படுத்துவதில்லை.
கடந்த தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்களின் நலனுக்காக 35 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கியது. ஆனால் தற்போதுள்ள அராஜக ஆட்சியில் 27 சதவிகிதம் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கி வருகிறது.

ஆகவே தெலுங்கு தேசம் கட்சி யாதவ சங்கம் சார்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சங்கம் சார்பில் கங்காதர நெல்லூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் ஒவ்வொரு கிராமமாக சென்று வீடு வீடாக ஆளும் கட்சி அரசு பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்களுக்கு செய்த துரோகங்கள் கடந்த ஆட்சியில் தெலுங்கு தேச கட்சி பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்களுக்கு செய்த நலத்திட்ட பணிகள் குறித்து துண்டு பிரசாரம் செய்ய உள்ளோம்.

இதற்காக தற்போது துண்டு பிரசார போஸ்டர் வெளியீடு செய்யப்பட்டது. இன்றிலிருந்து கங்காதர நெல்லூர் சட்டமன்றத் தொகுதி முழுவதும் பொது மக்களிடையே துண்டு பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார். இதில் தெலுங்கு தேசம் கட்சி கங்காதர நெல்லூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் தாமஸ் உள்பட தெலுங்கு தேசம் கட்சி பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தலைவர்கள், யாதவ சங்க தலைவர்கள், பொருளாளர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு துண்டு பிரசார போஸ்டர் வெளியீடு செய்தனர்.

The post சித்தூர் எஸ்ஆர் புரம் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் பிசி மக்களின் நலனுக்காக துண்டு பிரசார போஸ்டர் appeared first on Dinakaran.

Tags : TDP ,Chittoor SR Puram ,Yadava ,Sangh ,President ,Chittoor ,SR Puram ,Telugu Desam Party Office ,Desam Party Office ,Dinakaran ,
× RELATED தென்காசி ராம் நல்லமணி யாதவா கல்லூரியில் அறிவியல் கண்காட்சி