×

கல்வராயன்மலையில் பள்ளியை தாமதமாக திறப்பதால் வெளியில் காத்துக்கிடக்கும் மாணவர்கள்

*நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கல்வராயன்மலை : கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள முண்டியூர் கிராமத்தில் அரசு மலைவாழ் உண்டு உறைவிட தொடக்க பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கவியம், நத்தம்பள்ளி, பன்னிப்பாடி, முண்டியூர், தாழ்முண்டியூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 100க்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர், ஒரு பகுதி நேர ஆசிரியர் என 3 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளிக்கு ஆசிரியர்கள் சரியாக கால நேரத்துக்கு வருவதில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் நேற்று 9.00 மணிக்கு திறக்க வேண்டிய பள்ளி 11 மணிக்கு திறக்கப்பட்டு, பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த கல்வராயன்மலையில் உள்ள பள்ளியில் ஆசிரியர்கள் சரியான நேரத்துக்கு வருவதில்லை. மாதம் முழுவதும் குறைந்த நாட்களே பள்ளிகள் திறக்கப்படுகிறது. தலைமையாசிரியரும் சரியான நேரத்துக்கு வருவதில்லை.

இதனால் மாணவர்களின் படிப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் மாவட்ட ஆட்சியர் கல்வராயன்மலையில் உள்ள அரசு மலைவாழ் உண்டு உறைவிட மாதிரி பள்ளியை திடீரென ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கல்வராயன்மலையில் பள்ளியை தாமதமாக திறப்பதால் வெளியில் காத்துக்கிடக்கும் மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Kalvarayanmalai ,Mundiyur ,Kallakurichi ,
× RELATED கஞ்சா வைத்திருந்தவர் கைது