×

மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள நகைக்கடையில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

மதுரை: மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள நகைக்கடையில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தெற்கு மாசி வீதியில் தட்சிணாமூர்த்தி என்பவர் ஜானகி ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்தி நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையில் விற்பனை நடந்துகொண்டிருந்த நிலையில், திடீரென நகைக்கடையின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இதன் காரணமாக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அங்கிருந்து ஓடியுள்ளார். இதனை தொடர்ந்து உரிமையாளரின் மருமகனான மோதிலால் தீயை அணைப்பதற்காக கடையின் முதல் தளத்திற்கு சென்ற நிலையில், அங்கு அவர் தீயில் சிக்கியுள்ளார். தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் தீயில் சிக்கிக்கொண்ட மோதிலாலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள நகைக்கடையில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Madurai's South Masi Road ,Madurai ,Madurai South Masi Road ,Dinakaran ,
× RELATED இளைஞர்களிடம் புத்தக வாசிப்பை...