×

தமிழக பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தடயவியல் தணிக்கை நிபுணர்களின் உதவியை பயன்படுத்தி கொள்ள அரசாணை..!!

சென்னை: தமிழ்நாடு பொருளாதார குற்றப்பிரிவினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தடயவியல் தணிக்கை நிபுணர்களையும், தொழில்நுட்ப தணிக்கை நிபுணர்களின் உதவியை பயன்படுத்தி கொள்ள புதிய அரசாணைக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சமீபகாலமாக பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

பல்லாயிரக்கணக்கான ரூபாய் மோசடி நடைபெற்று வருகிறது. இந்த மோசடியில் மென்பொருட்களை பயன்படுத்தி தொழில்நுட்ப ரீதியாக பல ஆவணங்களை கண்டறியவும், சொத்துக்களை கணக்கிடுவதற்கும், தடயவியல் தணிக்கை நிபுணர்களையும், தொழில்நுட்ப தணிக்கை நிபுணர்களையும் பயன்படுத்திக்கொள்ள BUDS எனப்படும் ஒழுங்குபடுத்தப்படாத முதலீட்டு திட்ட தடைச் சட்டத்தில் புதிய விதிகளை அமல்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வருமானவரித்துறை போல் தமிழக பொருளாதார குற்றப்பிரிவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப மோசடிகளை மென்பொருள் உதவியுடன் கண்டுபிடிக்க பொருளாதார குற்றப்பிரிவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே வருமானவரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் ஏஜென்சிகள் இதுபோன்ற ஆடிட்டர்களை பயன்படுத்தி வந்த நிலையில், தமிழக அரசும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆருத்ரா, ஐஎஃப்எஸ், ஹிஜாவு போன்ற நிதி மோசடி நிறுவனங்களை அம்பலப்படுத்த கூடுதல் அதிகாரம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழக பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தடயவியல் தணிக்கை நிபுணர்களின் உதவியை பயன்படுத்தி கொள்ள அரசாணை..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Economic Offenses Division ,CHENNAI ,Economic Crimes Unit ,Tamil Nadu ,Tamil Nadu Economic Crimes Division ,Dinakaran ,
× RELATED லோன் வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடி 6...