×

உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்து: குழாய்களில் ஏற்பட்டுள்ள சிறு பிரச்சனை காரணமாக செங்குத்தாக துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்..!!

டேராடூன்: உத்தராகண்ட் சுரங்கப்பாதை மீட்புப் பணியில் செங்குத்தாக துளையிடும் பணி நிறுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தராகண்டில் சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படும் சுரங்கப் பாதையில் கடந்த 12ம் தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க 17 வது நாளாக மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுமார் 60 மீட்டர் தொலைவுக்கு மணல், கடினமான பாறைகள் சுரங்கத்தை மூடியிருக்கிறது.

சுரங்கப் பாதை மணல் குவியலில் பக்கவாட்டில் தொடர்ந்து துளையிட டெல்லியில் இருந்து 24 சிறப்பு தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். இந்நிலையில், உத்தராகண்ட் சுரங்கப்பாதை மீட்புப் பணியில் செங்குத்தாக துளையிடும் பணி நிறுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 43 மீட்டர் தூரம் வரை செங்குத்தாக துளையிடும் பணி முடிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்புக்குழு அறிவித்துள்ளது. எஞ்சிய தொலைவுக்கு செங்குத்தாக துளையிட 40 முதல் 50 மணி நேரம் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களுக்கு மேலிருந்து ஆக்சிஜன் வழங்க 78 மீ. தூரத்துக்கு செங்குத்தாக துளையிடப்பட்டுள்ளது. குழாய்களில் ஏற்பட்டுள்ள சிறு பிரச்சனை காரணமாக செங்குத்தாக துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே ஆட்கள் மூலம் கை கருவிகளை பயன்படுத்தி துளையிடும் பணி நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கைகளால் தோண்டும் பணி 51 மீட்டர் தூரத்தை எட்டியிருப்பதாகவும் மீட்புக்குழு அறிவித்துள்ளது.

The post உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்து: குழாய்களில் ஏற்பட்டுள்ள சிறு பிரச்சனை காரணமாக செங்குத்தாக துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்..!! appeared first on Dinakaran.

Tags : Uttarakhand tunnel accident ,Dehradun ,Uttarakhand ,Silkyara-Barkot ,Uttarakhand… ,Dinakaran ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...