×

இருமுடி, தைப்பூச விழாவை முன்னிட்டு மேல்மருவத்தூரில் விரைவு ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும் : ரயில்வே வாரியம்

சென்னை: இருமுடி, தைப்பூச விழாவை முன்னிட்டு மேல்மருவத்தூரில் விரைவு ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் திருச்சி மலைக்கோட்டை (12653), மதுரை பாண்டியன் (12637), செங்கோட்டை பொதிகை (12661), மன்னார்குடி மன்னை (16179), கொல்லம் விரைவு ரயில் ( 16101), தஞ்சாவூர் உழவன் (16865), சேலம் விரைவு ரயில் (22153), மதுரை வைகை (12635) மற்றும் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும்.

அந்த்யோதயா (20691) ஆகிய 9 விரைவு ரயில்களும் டிசம்பர் 1 முதல் ஜனவரி 25 வரை மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக 2 நிமிடம் நின்று செல்லும்.இவற்றில் சென்னை எழும்பூர்- சேலம் விரைவு ரயிலை தவிர, மற்ற ரயில்கள் இருமார்க்கமாகவும் மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும். இதுதவிர வெளிமாநிலங்களில் இருந்து இயக்கப்படும் வேறு சில விரைவு ரயில்களும் மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இருமுடி, தைப்பூச விழாவை முன்னிட்டு மேல்மருவத்தூரில் விரைவு ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும் : ரயில்வே வாரியம் appeared first on Dinakaran.

Tags : Malmaruvathur ,Daimudi, ,Taipuza ceremony ,Railway Board ,Chennai ,Melmaruvathur ,Urumudi and ,Thaipuza Ceremony ,Tiapusa Ceremony ,
× RELATED லாரி மீது வேன் மோதி கோவையை சேர்ந்த 11...