×

சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்னோட்ட கருத்தரங்கு

நாகப்பட்டினம்,நவ.28: தமிழ்நாடு அரசின் சார்பில் ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடத்த முதல்வர் திட்டமிட்டுள்ளார். இதில் பன்னாட்டு, உள்நாட்டு முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் நிகழ்வாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு கருதப்படுகிறது.

வரும் 2030ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரத்தை எட்டுவதை நோக்கிய தமிழ்நாடு முதல்வர் பயணத்தில் முக்கிய படிநிலையாக இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு அமையும். சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்னோட்டமான கருத்தரங்கம் இன்று (28ம் தேதி) காலை 10 மணிக்கு நாகப்பட்டினம் திருவாரூர் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. கருத்தரங்கில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்தில் நடைபெறும் முன்னேற்பாடு கூட்டத்திற்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை வகிக்கவுள்ளார். அமைச்சர் ரகுபதி கருத்தரங்கம் நோக்கம் குறித்து பேசுகிறார். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தொழில் வணிக நிறுவன சங்கப்பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே தொழில் நிறுவனங்கள் தொடங்க அரசு சார் நடைமுறைகள், அரசு தரும் ஆதரவுகள், தொழில்நுட்ப நிதி மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து உரிய ஆளுமைகள், வங்கியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பேசுவார்கள். தொழில் துறையினர், வணிகர், தொழில் முனைவோர், கைவிளைஞர், தொழில் வணிக வல்லுநர்கள், ஆலோசகர்கள், கல்வி நிறுவன வழிகாட்டிகள், சுய தொழில் ஊக்குநர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்னோட்ட கருத்தரங்கு appeared first on Dinakaran.

Tags : World Investors Conference ,Chennai ,NAGAPATTINAM ,TAMIL NADU ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் வின்பாஸ்ட் மின்சார...