×

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வளாகத்தில் உலக வாசக்டமி இருவார விழா விழிப்புணர்வு வாகனம்

மயிலாடுதுறை, நவ.28: மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வளாகத்தில் குடும்பநலத்துறை சார்பில் உலக வாசக்டமி இருவார விழா விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வளாகத்தில் குடும்பநலத்துறை சார்பில் உலக வாசக்டமி (ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை) இருவார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி கலந்து கொண்டு விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உலக வாசக்டமி இருவார விழாவானது திருமணமான ஆண்களிடையே அவர்கள் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி ஆண்டுதோறும் நவ.21ம் தேதி முதவ் டிசம்பர் 4ம் தேதி வரை நடத்தப்படுகிறது. அந்த வகையில், இவ்வாகனமானது தொடங்கி வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை துணை இயக்குனர் அஜித் பிரபுகுமார், மருத்துவ ஊரக நலப்பணிகள் துணை இயக்குனர் மரு.ஜோஸ்பின் அமுதா, நகராட்சி ஆணையர் சங்கர், நகராட்சி பொறியாளர் மகாதேவன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மயிலாடுதுறை நகராட்சி வார்டு 23ல் உள்ள ஐயன்குளம் ரூ.94.45 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருவதையும், வார்டு 34ல் உள்ள வண்ணான்குளம் ரூ.1 கோடியே 46 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருவதையும் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பணிகளின் தரத்தையும், பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் மேற்கொள்ள நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

The post மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வளாகத்தில் உலக வாசக்டமி இருவார விழா விழிப்புணர்வு வாகனம் appeared first on Dinakaran.

Tags : World Travel Biweekly ,Mayiladuthurai Government Hospital Complex ,Mayiladuthurai ,World ,Vasaktami ,Mayiladuthurai government hospital ,-week ,Mayiladuthurai government ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...