×

தனியார் பாலை விட ஆவின் பால் லிட்டருக்கு ₹20 வரை குறைவு: அதிகாரிகள் தகவல்

சென்னை: தனியார் பாலை விட ஆவின் பால் பாக்கெட் லிட்டருக்கு ரூ. 14 முதல் ரூ.20 வரை குறைவாகவே விற்கப்படுகிறது என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆவின் நீண்ட காலமாக வழங்கி வரும் பச்சை நிற நிலைபடுத்தப்பட்ட பாலை பொருத்த வரை பசும்பாலில் கூடுதலாக 1% கொழுப்பு சேர்த்து பதப்படுத்தி விற்கப்பட்டு வருகிறது. பல வாடிக்கையாளர்கள் கூடுதலாக கொழுப்பு அல்லது புரதம் உள்ளிட்ட திடப்பொருட்கள் சேர்ப்பதை விரும்பவில்லை. எனவே ஊதா நிற ஆவின் டிலைட் பாலை முன்னிலைப்படுத்தப்படுகிறது. இது லாப நோக்கத்திற்காக விற்பனை செய்யப்படவில்லை.

மேலும் சில வாடிக்கையாளர்கள் மருத்துவர்களின் ஆலோசனை பெற்றவர்கள், தீவிர உடற்பயிற்சி செய்பவர்கள் கொழுப்பு சத்து குறைந்த பாலை விரும்புவார்கள். அதற்காக கொழுப்புச்சத்து குறைக்கப்பட்ட சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ஒன்று ரூ.40க்கு விற்கப்பட்டு வருகிறது. ஆனால் தனியார் நிறுவனங்கள் அமுல் ரூ.54, நந்தினி ரூ.48, ஆரோக்கியா ரூ.56, ஹட்சன் ரூ.56, திருமலா ரூ.56க்கும் விற்கப்படுகிறது. மற்ற நிறுவனங்களின் விலையை விட ரூ.16 குறைவாக ஆவின் நிர்வாகம் விற்பனை செய்து வருகிறது. அதைப்போன்று பச்சை நிற பால் பாக்கெட் தனியார் நிறுவனம் அமுல் ரூ.56, நந்தினி ரூ.56, ஆரோக்கியா ரூ.66, ஹட்சன் ரூ. 64, திருமலா ரூ.64க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஆவின் நிர்வாகம் ரூ.44க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது மற்ற நிறுவனங்களை விட ரூ.20 குறைவாக விற்பனை செய்து வருகிறது.

ஆவின் நிர்வாகம் விற்பனை செய்யும் 4 வகையான பாலின் விலை மற்ற தனியார் பால் நிறுவனங்களின் விலை விட ரூ. 14 முதல் ரூ.20 வரை குறைவாகவே விற்பனை செய்யப்படுகிறது என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post தனியார் பாலை விட ஆவின் பால் லிட்டருக்கு ₹20 வரை குறைவு: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Avian ,CHENNAI ,Aavin ,Avin ,Dinakaran ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...