×

ஏமாற்றுப்பேர்வழிகளின் தந்தை கோயபல்ஸ் போல் எடப்பாடி காட்சி அளிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்

சென்னை: ஏமாற்றுப்பேர்வழிகளின் தந்தை கோயபல்ஸ் போல் காட்சியளிப்பவர் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம் செய்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தவழ்ந்து முதலவர் பொறுப்புக்கு வந்தவர். அதனால் அவருடைய பேச்சு மற்றும் அறிக்கை அடிப்படையில்லாமல் தவழும் குழந்தை போல் குழந்தைத்தனமாக உள்ளது என்பது நாடறியும். ஒன்றல்ல, இரண்டல்ல பலமுறை அவருக்கு நான் ஆதாரங்களுடன் பதில் அளித்து இருக்கிறேன். எடப்பாடி பழனிசாமி டெங்கு பற்றிய அறிக்கையில் “டெங்கு போன்ற விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருவதாக செய்திகள் வருகின்றன“ என்று குற்றம்சாட்டுவதில் கூட ஆருடம் கூறுவதைப்போல் குழப்பநிலையில் உள்ளார்.

அடுத்ததாக ஜெயலலிதா ஆட்சியில் நடத்தியதைப்போல முகாம்கள் நடத்த வேண்டும் என்கிறார். மருத்துவத்துறை வரலாற்றிலேயே இல்லாத வகையில் இலக்கை மிஞ்சிய சாதனையாக இதுவரை 10,576 முகாம்கள் நடைபெற்று உள்ளது. அதில் 5,21,853 பேர் பயன்பெற்றுள்ளனர். இது தெரியாமல் யாரோ எழுதிக் கொடுத்ததை வருகிற நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு மருத்துவத்துறையில் அரசியல் செய்ய பார்க்கிறார். மருத்துவத்துறை, உள்ளாட்சித்துறை இணைந்து தேங்கி உள்ள தண்ணீரை அகற்றி டெங்கு பரவலை தடுக்க வேண்டும் என்கிறார் எடப்பாடி. 2021 திமுக ஆட்சி அமைந்த பிறகு தொடர் மழை பெய்து ஏரி, குளம் நிரம்புகிறதே தவிர சாலையில் ஒரு சொட்டு நீர் தேங்குவதில்லை.

இதை அறியாமல் எடப்பாடி ஒரு பொய்யை உணர்வுபூர்வமாக எடுத்துரைத்து, அதை உண்மை என நம்பவைப்பதில் உலகத்தில் கோயபல்ஸை மிஞ்சிய ஆள் இல்லை என்பார்கள், அதைப்போல ஏமாற்றுப்பேர்வழிகளின் தந்தை கோயபல்ஸ் போல் காட்சி தருகிறார். அவர் நிலையை மாற்றி கொள்ள வேண்டும்.

The post ஏமாற்றுப்பேர்வழிகளின் தந்தை கோயபல்ஸ் போல் எடப்பாடி காட்சி அளிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Goebbels ,Minister ,M. Subramanian ,Chennai ,Edappadi Palaniswami ,
× RELATED மோடியின் கோயபல்ஸ் பிரசாரத்தால்...