×

சமூகவலைதளத்தில் அரிவாளுடன் வீடியோ பதிவிட்டவர் கைது

செங்கோட்டை,நவ.28: சமூகவலைதளத்தில் அரிவாளுடன் வீடியோ பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். செங்கோட்டை அடுத்த விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்து இருளப்பன் மகன் உதயகுமார் (23). இவர் சமூக வலைதள பக்கத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் தொடர்ச்சியாக அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வீடியோக்களை பதிவு செய்து வந்துள்ளார். இது குறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் அறிவுறுத்தியதின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து உதயகுமாரை கைது செய்தார்.

The post சமூகவலைதளத்தில் அரிவாளுடன் வீடியோ பதிவிட்டவர் கைது appeared first on Dinakaran.

Tags : Senkottai ,Viswanathapuram ,Senkot ,Arywal ,Dinakaran ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...