×

பூரண மதுவிலக்கினை அமல்படுத்திட கோரி ஈரோடு கலெக்டரிடம் தமமுகவினர் மனு

 

ஈரோடு, நவ. 28: தமிழகத்தில் பூரண மதுவிலக்கினை அமல்படுத்திட கோரி தமமுக சார்பில் ஈரோடு கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் செல்வராஜ் நேற்று மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தென் மாவட்டங்களில் மக்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. தேவேந்திரகுல வேளாளர், பட்டியல் சமூக மக்களுக்கு கிராமங்களில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது.

கஞ்சா, டாஸ்மாக் மது போதை பழக்கத்தால், கொலைகள் நடக்கிறது. இப்பழக்கத்துக்கு ஆளாகுபவர்கள், கஞ்சா,மதுவுக்காக ஆடு மேய்ப்பவர்கள்,வயலில் வேலை செய்வோர், அரசு ஊழியர்கள், அப்பாவி பொதுமக்களை கொலை செய்கின்றனர். திருப்பணி கரிசல்குளம் சந்திரா, கீழ்நத்தம் ராஜாமணி, மணக்கரை மணி, இருக்கன்குடி காந்திராஜன் என பலரும் முன்விரோதம், ஜாதி பிரச்னை, பணம் போன்றவற்றுக்காக கொலை செய்யப்படவில்லை.

இவை அனைத்துக்கும் மூலக் காரணமாக மது, போதை பொருட்கள் இருந்துள்ளன. எனவே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு ஏற்படுத்த வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடை செய்ய வேண்டும். படுகொலைகளில் ஈடுபடும் நபர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post பூரண மதுவிலக்கினை அமல்படுத்திட கோரி ஈரோடு கலெக்டரிடம் தமமுகவினர் மனு appeared first on Dinakaran.

Tags : Erode Collector ,Erode ,Damuk ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஈரோடு, மணிக்கூண்டு பகுதி சாலையோர வியாபாரிகள் மனு