×

800க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை

 

கோவை, நவ.28: கோவை கீரணத்தம் கால்நடை மருந்தகம் கொண்டயம்பாலையம் ஊராட்சிக்கு உட்பட்ட வருதயங்கார்பாளையம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனநர், கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்திக் திட்ட துணை இயக்குநர், கால்நடை மருத்துவ வல்லுநர்கள், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் கால்நடை நோய் புலனாய்வுப்பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆடு, மாடு, நாய், பூனை என மொத்தம் 800க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில், கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை நடந்தது. தடுப்பூசிகளும் போடப்பட்டன.

The post 800க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore Keeranatham Veterinary Clinic ,Varudayangarpalayam ,Kondayampalayam Panchayat ,
× RELATED கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு...