×

ஊட்டி படகு இல்லம் செல்லும் நடைபாதை சீரமைக்கப்படுமா?

 

ஊட்டி, நவ.28: ஊட்டி படகு இல்லம் செல்லும் நடைபாதையை சீரமைக்கப்படாமல் உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா நகரமான ஊட்டியில், நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானவர்கள் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம் போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர். இந்நிலையில், படகு இல்லம் செல்லும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து படகு இல்லம் வரை உள்ள சாலையோரம் நடை பாதைகளில் நடந்தே செல்வது வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

ஆனால், இந்த நடைபாதை பல இடங்களில் பழுதடைந்து சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் கற்கள் குவிக்கப்பட்டுள்ளன. இதனால், சுற்றுலா பயணிகள் நடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் மக்களும் இந்த நடைபாதையை பயன்படுத்தும் நிலையில் இதனை நகராட்சி நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சீரமைக்கப்படாமல் உள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த நடைபாதையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post ஊட்டி படகு இல்லம் செல்லும் நடைபாதை சீரமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Ooty boat ,Ooty ,Ooty Boathouse ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...