×

வியாபாரத்தில் நஷ்டம், கடன் தொல்லை 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை: கந்து வட்டியால் விபரீத முடிவு

துமகூரு: கர்நாடக மாநிலம் துமகூரு நகரைச் சேர்ந்தவர் கரீப்சாப் (36). இவரது மனைவி சுமயா (32). இவர்களுக்கு ஹசிரா (14), மஹ்மூத் ஷுபன் (10), மஹ்மூத் முனீர் (8) ஆகிய குழந்தைகள் இருந்தனர். குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த கந்து வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். மேலும் அவர், தொழிலிலும் போதிய வருமானம் இல்லை. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்தார். கடனை அடைக்க முடியாமல் தவித்தார். அவர் பெரும்பாலும் கந்து வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கடன் கொடுத்தவர்கள், பணத்தை திரும்ப கேட்டு டார்ச்சர் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் குடும்பத்துடன் இருந்த கரீப்சாப், நேற்று காலை வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கதவை நீண்ட நேரமாக தட்டினர். ஆனால் திறக்கவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, 3 குழந்தைகளும் கட்டிலில் சடலமாக கிடந்தனர். கரீப்சாப், தனது மனைவி சுமயாவுடன் ஒரே கயிற்றில் தூக்கிட்டு சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து போலீசார், சடலங்களை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

The post வியாபாரத்தில் நஷ்டம், கடன் தொல்லை 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை: கந்து வட்டியால் விபரீத முடிவு appeared first on Dinakaran.

Tags : Kundu ,Tumakuru ,Karipsap ,Tumakuru, Karnataka ,Sumaya ,Hasira ,
× RELATED கடமலைக்குண்டு அருகே குண்டும்,...