×

அடுத்த ஆண்டு மார்ச்சில் குடியுரிமை சட்ட இறுதி வரைவு தயார்: உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தகவல்

கொல்கத்தா: குடியுரிமை திருத்த சட்டத்தின் இறுதி வரைவு அறிக்கை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தயாராகும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள தாகூர்நகரில் நடந்த கூட்டத்தில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பேசுகையில், “ கடந்த 2 ஆண்டுகளில் குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்பாடுகள் வேகம் பெற்றுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் குடியுரிமை திருத்த சட்டத்தின் இறுதி வரைவு அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது ”என்றார். இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாந்தனு சென் கூறுகையில், “தேர்தலின்போது மட்டுமே பாஜ மாதுவா மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை நினைவில் கொள்கிறது. மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை பாஜவால் அமல்படுத்த முடியாது” என்றார்.

The post அடுத்த ஆண்டு மார்ச்சில் குடியுரிமை சட்ட இறுதி வரைவு தயார்: உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister of State for Home Affairs ,Ajay Mishra ,Kolkata ,Union Home Ministry ,
× RELATED வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை...