×

மூச்சுத்திணறலால் நடிகர் திடீர் மரணம்

ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள திருப்புளியங்குடி தெற்குத்தெருவைச் சேர்ந்த பண்டாரம் மகன் மாரிமுத்து (30). இவர் கர்ணன் படத்தில் அறிமுகமாகி பின்னர் பிரபல டைரக்டர் மாரி செல்வராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். இவருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. நேற்று காலையில் அவருக்கு திடீரென மூச்சித்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த தகவலரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார், மாரிமுத்து மரணத்திற்கு சிகரெட் அதிகளவில் பிடித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மூச்சுத்திணறலால் நடிகர் திடீர் மரணம் appeared first on Dinakaran.

Tags : Srivaikundam ,Bandaram Makan Marimuthu ,Tirupuliangudi South Street ,Thoothukudi district ,
× RELATED ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் சுவாமி...