×

பிரசவத்துக்கு லஞ்சம்: செவிலியர் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே மீமிசலை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சிந்துஜாவுக்கு மணமேல்குடி அரசு மருத்துவமனையில் கடந்த 16ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அப்போது, பிரசவம் பார்த்த செவிலியர் அமுதா என்பவர் ரூ.5000 லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து ரூ.3000 கொடுத்த சரவணன் மேற்கொண்டு பணத்தை கொடுக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சரவணனுக்கும், அமுதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. லஞ்சம் கேட்டது தொடர்பாக மணமேல்குடி காவல் நிலையத்தில் சரவணன், சிந்துஜா ஆகியோர் தனித்தனியே அளித்த புகாரின் பேரில் போலீசார் தனித்தனியே வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக செவிலியர் அமுதாவை சஸ்பெண்ட் செய்து புதுக்கோட்டை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் ஸ்ரீபிரியா தேன்மொழி நேற்று உத்தரவிட்டார்.

The post பிரசவத்துக்கு லஞ்சம்: செவிலியர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Saravanan ,Meemisal ,Aavudayarkovil ,Sindhuja ,Mamaelgudi Government Hospital ,Dinakaran ,
× RELATED பயனாளிக்கு இழப்பீடு தொகை வழங்காததால்...