×

ரூ.400 கோடி மோசடியில் தேடப்பட்டுவந்த நிதி நிறுவன இயக்குனர் கைது

சிவகங்கை: காரைக்குடியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.400 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த இயக்குனரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை தலைமை இடமாகக் கொண்டு நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்தநிறுவனத்தில் டெபாசிட் செய்தால் கூடுதல் வட்டி தரப்படும் உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதை நம்பி சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் முதலீடு செய்தனர்.

இதன்மூலம் பொதுமக்களிடம் இருந்து ரூ.400 கோடி வரை அந்த நிறுவனம் வசூல் செய்தது. கடந்த ஆண்டு திடீரென இந்த நிதி நிறுவனத்தினர் தலைமறைவாகி விட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நிதி நிறுவனத்தை சேர்ந்த இயக்குநர்கள் உள்ளிட்ட 44 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நிறுவனத்தின் இயக்குனரான காரைக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியனை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி ஸ்ரீராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.சுப்பிரமணியன் அரசு வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார்.

The post ரூ.400 கோடி மோசடியில் தேடப்பட்டுவந்த நிதி நிறுவன இயக்குனர் கைது appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Karaikudi ,Economic Offenses Division ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் மக்களின்...