×

வீட்டில் துப்பாக்கி பதுக்கி விற்பனை ஊராட்சி மன்ற தலைவர் குண்டர் சட்டத்தில் கைது: தஞ்சை கலெக்டர் அதிரடி

தஞ்சாவூர்: வீட்டில் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த வழக்கில் ஊராட்சி மன்றத்தலைவர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை கலெக்டர் உத்தரவிட்டார். தஞ்சாவூர் மாவட்டம், கள்ளப்புலியூர் ஊரட்சி மன்றத்தலைவரான மணஞ்சேரியை சேர்ந்த பெரியவன் (எ) முருகன் (45) என்பவர், புதுச்சேரியில் இருந்து துப்பாக்கி, தோட்டாக்களை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து ரகசியமாக விற்பனை செய்து வந்தார். இவரிடம் கைத்துப்பாக்கி வாங்கிய திருப்புறம்பியம் பகுதியை சேர்ந்த தென்றல் (33) என்பவரை கைது செய்தனர்.

இவர் கொடுத்த தகவலின்பேரில் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், மற்றும் அவரது நண்பர்களான ஈஸ்வரன் (21), ரஞ்சித்குமார்(26), மணிகண்டன் (26) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், 14 தோட்டாக்கள், 2 கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யப்பட்டுதிருச்சி மத்திய சிறையில் கடந்த 8ம் தேதி அடைக்கப்பட்டனர். இந்நிலையில், துப்பாக்கி சப்ளை செய்த முருகனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின் பேரில், தஞ்சாவூர் கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் உள்ள முருகன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவர் மீது 3 கொலை உள்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

The post வீட்டில் துப்பாக்கி பதுக்கி விற்பனை ஊராட்சி மன்ற தலைவர் குண்டர் சட்டத்தில் கைது: தஞ்சை கலெக்டர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Panchayat ,Thanjavur ,
× RELATED பூதலூர் ஊராட்சியில் காலை உணவு திட்டம் தொடக்கம்