×

மரக்கன்று நடும் விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம், தண்ணீர்குளம் ஊராட்சி திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழாவும், பள்ளி வளாகம் மற்றும் ஊராட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் விழாவும் நடைபெற்றது. இந்த விழாவிற்கு இளைஞரணி நிர்வாகிகள் தியாகு சந்தர் தலைமை தாங்கினார்.

அஸ்வின், அஸ்வந்த்குமார், பிரவீன், அனீஸ், விஷ்வா, சுனில்குமார், பர்வீன், மணிகண்டன், ஏக்நாத், புஜ்ஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் மாவட்ட பிரதிநிதியும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான டி.டி.தயாளன் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில், இனிப்பு வழங்கி, மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் ஆசிரியர்கள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

The post மரக்கன்று நடும் விழா appeared first on Dinakaran.

Tags : Sapling ceremony ,Tiruvallur ,Tiruvallur Union ,Waterkulam Panchayat DMK ,Minister ,Udhayanidhi Stalin ,Sapling Planting Ceremony ,Dinakaran ,
× RELATED செங்கல்சூளை தொழிலாளர்களின்...