×

ஜெயக்குமார் ஆரூடம் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி நிச்சயமாக அமையும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னையில் அளித்த பேட்டி: 2 கோடிக்கு மேல் அதிமுகவில் தொண்டர்கள் இருக்கிறார்கள். கட்சி இன்று எழுச்சியாக உள்ளது. இப்போதும், எப்போதும் பாஜவுடன் அதிமுக கூட்டணி வைத்துக்கொள்ளாது. 2024, 2026ம் ஆண்டு தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. அதிமுகவில் பூத் கமிட்டி, மகளிர் குழு என அனைத்து பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. கூட்டணி உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். இன்னும் 3, 4 மாதங்கள் உள்ளது. அதிமுக தலைமையில் மெகா கூட்டணி நிச்சயமாக அமையும். இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.

The post ஜெயக்குமார் ஆரூடம் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Jayakumar ,Arudam ,CHENNAI ,Former minister ,AIADMK… ,Jayakumar Arudam ,Dinakaran ,
× RELATED நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும்: ஜெயக்குமார் பேட்டி