×

அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த மாதம் 27ம் தேதி திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் 2024 ஜனவரி 1ம் தேதி 18 வயது நிறைவடைபவர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தம் செய்யவும் கடந்த 2 நாட்களாக பணிகள் நடைபெற்றன. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 3,655 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள அரசுப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் திருவள்ளூர் அதிமுக ஒன்றிய செயலாளர் புட்லூர் சந்திரசேகர் பார்வையிட்டார்.

அப்போது நிர்வாகிகள் சந்திரன், சக்திஜெயபால், ராஜசேகர் உள்பட பலர் உடனிருந்தனர். இந்த முகாமில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பாக எத்தனை மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்ற விவரங்களையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். மேலும், படிவங்கள் தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தனர்.

The post அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Tiruvallur district ,Thiruvallur District Collector ,
× RELATED செங்கல்சூளை தொழிலாளர்களின்...