×

அருங்குன்றம் ஊராட்சியில் நீரிழிவு மருத்துவ முகாம்

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம் அருங்குன்றம் ஊராட்சியில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நீரிழிவு நோய் மருத்துவ முகாம் நடந்தது. அருங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசு தலைமை தாங்கினார். இதில், தனியார் மருத்துவமனை மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு சர்க்கரை நோயை கண்டறிதல், ரத்த அழுத்த பரிசோதனை போன்றவற்றை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், ஹேன்ட் இன் ஹேன்ட் இந்திய சுாகதார திட்ட முதன்மை திட்ட மேலாளர் ஜெரோமியா ஜெபஸ்டின், மருத்துவர் மோகன்ராவ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். முடிவில் களப்பணியாளர் நவநீதம் நன்றி கூறினார்.

The post அருங்குன்றம் ஊராட்சியில் நீரிழிவு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Diabetes Medical Camp ,Arunkunram Panchayat ,Tiruporur ,Arungunram Panchayat ,Tiruporur Union ,World Diabetes Day ,Arungunram… ,Diabetes ,Medical Camp ,Dinakaran ,
× RELATED திருப்போரூர் கந்தசாமி கோயிலில் மாசி...