×

வரி செலுத்துவோர் பட்டியலில் இருந்து 40,175 உற்பத்தியாளர்கள் மாயம்: கொரோனா காலத்தில் நடந்த சோகம்

புதுடெல்லி: கொரோனா காலத்தில் தொடங்கி கடந்தாண்டு வரை வரி செலுத்துவோர் பட்டியலில் இருந்து 40,175 உற்பத்தியாளர்கள் மாயமானதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு ெதாடங்கிய பிறகு நாடு முழுவதும் தொழில் துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அந்த வகையில் கடந்த 2020ம் ஆண்டு தொடங்கிய கொரோனா காலகட்டத்தில் இருந்து தற்போது வரை 40,175 உற்பத்தியாளர்கள், நாட்டின் வரி செலுத்துவோர் பட்டியலில் இருந்து வெளியேறி உள்ளனர். இவர்களின் தொழில்கள் முடங்கியதால், தங்களது தொழிலில் இருந்து வெளியேறிவிட்டனர்.

அதே 2019-20ம் ஆண்டின் மதிப்பீட்டு ஆண்டில் மொத்தம் 8,16,021 உற்பத்தியாளர்கள் வரிகளை செலுத்தியுள்ளனர். இந்த எண்ணிக்கையானது 2018-19ம் நிதியாண்டில் அவர்கள் ஈட்டிய வருமானத்தின் அடிப்படையில் வரி ெசலுத்தியவர்களின் பட்டியலாகும். அவர்களில் கிட்டத்தட்ட ஐந்து சதவீதம் பேர் வரி செலுத்துவோர் பட்டியலில் இருந்து வெளியேறி விட்டனர். கடந்த 2022ம் ஆண்டின் மதிப்பீட்டு ஆண்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 775,846 ஆக உள்ளது. உற்பத்தி துறையில் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு இருந்ததை காட்டிலும் தற்போது கீழான நிலைக்கு தள்ளப்பட்டதாக வர்த்த நாளிதழில் கூறப்பட்டுள்ளது.

The post வரி செலுத்துவோர் பட்டியலில் இருந்து 40,175 உற்பத்தியாளர்கள் மாயம்: கொரோனா காலத்தில் நடந்த சோகம் appeared first on Dinakaran.

Tags : NEW DELHI ,CORONA ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...