×

கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கு: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கரூர் மாவட்டம் புலியூர் பகுதியில் கடந்த பல வருடங்களாக உரிய அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக கல் குவாரி நடைபெறுகிறது. சுமார் 13 நிறுவனங்கள் சட்ட விரோதமாக கற்களை உடைத்து எடுப்பதற்கு ஆபத்தான முறையில் வெடி பொருட்கள் மூலம் பாறைகளை தகர்த்துகின்றனர். இதனால் ஏற்படும் தூசி மற்றும் கற்கள் சிதருவதால் அருகில் வசிக்கும் மக்களின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகள் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ள விதிகளை பின்பற்றாமல் குவரிகளை சட்ட விரோதமாக நடத்துகின்றனர்.

எனவே சட்ட விரோதமாக அனுமதி இன்றி கரூர் மாவட்டத்தில் நடைபெறும் கல் குவாரிகளின் அனுதியை ரத்து செய்து, அதனை மீறி செயல்படும் கல் குவாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு நடத்தப்பட்டது,விதிகள் பின்பற்றாமல் இயங்கிய 31 குவாரிகளின் அனுமதி ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய புவியியல் மற்றும் சுரங்கதுறை மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

The post கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கு: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Calvary ,iCourt branch ,Madurai ,Kalkuvari ,Dinakaran ,
× RELATED அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு...