சென்னை: தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. எழும்பூர் திருச்சி மலைக்கோட்டை விரைவு ரயில் நவ.30 முதல் ஜன.25 வரை மேல்மருவத்தூரில் நின்று செல்லும் எனவும் சென்னை எழும்பூர்- மதுரை பாண்டியன் விரைவு ரயில் டிச.1 முதல் ஜன.25 வரை மேல்மருவத்தூரில் 2 நிமிடம் நின்று செல்லும் எனவும் சென்னை எழும்பூர்- தஞ்சை உழவன் விரைவு ரயில் டிச.1 முதல் ஜன.25 வரை மேல்மருவத்தூரில் நின்று செல்லும் எனவும் பனாரஸ்-ராமேஸ்வரம் வாராந்திர விரைவு ரயில் டிச.3 முதல் ஜன.21 வரை மேல்மருவத்தூரில் நின்று செல்லும் எனவும் எழும்பூர் – நாகர்கோவில் விரைவு ரயில் டிச.7 முதல் ஜன.25 வரை மேல்மருவத்தூரில் நின்று செல்லும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
The post தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே appeared first on Dinakaran.