×

பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார் வி.கே.பாண்டியன்.. அடுத்தாண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என தகவல்..!!

புவனேஸ்வர்: ஒடிசாவில் ஐஏஎஸ் அதிகாரியகா இருந்து விருப்ப ஓய்வு பெற்ற தமிழரான வி.கே.பாண்டியன் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். ஒடிசா மாநில முதல்வர் முதல்வரின் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளர் பொறுப்பில் இருந்தவர் வி.கே.பாண்டியன். தமிழ்நாட்டை சேர்ந்த இவர் விருப்ப ஓய்வு பெற்றார்.
இதனைத் தொடர்ந்து , “மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5டி (Transformational Initiatives) திட்டம் மற்றும் நபின் ஒடிசாவின் தலைவராக வி.கே. பாண்டியன் நியமிக்கப்பட்டார். இந்த பதவி, கேபினெட் அமைச்சருக்கு இணையான பதவி. இதன் மூலம் பாண்டியன் முதல்வருக்குக் கீழ் நேரடியாக பணியாற்றுவார்.

விகே பாண்டியன் விருப்ப ஓய்வு பெற்ற சமயத்தில், பட்நாயக் ஆலோசனையின் பேரிலேயே அவர் விருப்ப ஓய்வு பெற்றதாகவும், விரைவில் அவர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலிலும் அவர் களமிறங்கலாம் என்றும் பிஜு ஜனதா தளம் கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் பலரும் கருதினர். இந்த நிலையில் வி.கே. பாண்டியன் முதல்வர் முன்னிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியில் முறையாக இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

The post பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார் வி.கே.பாண்டியன்.. அடுத்தாண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : VK Pandian ,Biju Janata Dal ,Bhubaneswar ,VK ,Pandian ,Odisha ,
× RELATED மாநிலங்களவையிலும் பெரும்பான்மை பலம் பெறும் பாஜ கூட்டணி