×

“சந்திரசேகர ராவ் ஆட்சியை தூக்கியெறிய மக்கள் தயாராகி விட்டனர்”: தெலுங்கானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு..!!

 

ஆந்திரா: தெலுங்கானா மக்கள் சந்திரசேகர ராவ் ஆட்சியை தூக்கி எரிய தயாராகிவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தெலுங்கானா தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரதமர் மோடி 3வது நாளாக பரப்புரையில் ஈடுபட்டார். மெஹபுபாபாத் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி, பாஜகவுக்கு அதிகரித்து வரும் ஆதரவை கண்டு கூட்டணி அமைத்துக்கொள்ள சந்திரசேகர ராவ் விரும்பியதாக தெரிவித்தார்.

முதலமைச்சர் சந்திரசேகர ராவ், டெல்லிக்கே வந்து கூட்டணி சேர விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் அதனை தான் நிராகரித்துவிட்டதாகவும் மோடி கூறினார். தெலுங்கானா மாநிலம் சீரழிவை சந்திக்க காங்கிரஸ் மற்றும் சந்திரசேகர ராவ் மட்டுமே காரணம் என்றும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது; பிஆர்எஸ் கட்சியின் சின்னமான காரில் உள்ள 4 சக்கரங்கள் மற்றும் ஸ்டியரிங்க்கும், காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

இரு கட்சிகளும் மத அடிப்படையிலான சமரசங்களில் ஈடுபடுகின்றன. இரு கட்சிகளும் ஊழலை ஊக்குவிக்கின்றன என்று குறிப்பிட்டார். இதேபோல் கரீம்நகர் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வதாக பெருமிதம் தெரிவித்தார்.தெலுங்கானா மக்களை அயோத்தி ராமர் கோயிலுக்கு இலவசமாக அழைத்துச் செல்ல பாஜக தீர்மானித்துள்ளதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.

The post “சந்திரசேகர ராவ் ஆட்சியை தூக்கியெறிய மக்கள் தயாராகி விட்டனர்”: தெலுங்கானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு..!! appeared first on Dinakaran.

Tags : Chandrashekara Rao ,PM Narendra Modi ,Telangana election campaign ,Andhra Pradesh ,Modi ,Telangana ,Chandrasekara Rao ,Telangana election ,Dinakaran ,
× RELATED திருச்சி விமான நிலையம் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!!