×

நிரந்தரமாக தண்ணீர் திறக்க வேண்டி வட்டமலை கரை அணையில் 10,008 தீபம் ஏற்றிய பொதுமக்கள்

வெள்ளகோவில் : வெள்ளக்கோவில் அருகே உள்ள வட்டமலை கரை அணைக்கு நிரந்தரமாக தண்ணீர் வழங்க வலியுறுத்தியும் சீம கருவேல மரங்களை அகற்றகோரியும் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக வட்டமலை கரை அணைப் பகுதியில் 5வது ஆண்டாக 10,008 விளக்குகளை ஏற்றி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வழிபாடு நடத்ததினர்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே உத்தமபாளையத்தில் வட்டமலை கரை ஓடை அணை உள்ளது, இந்த அணையானது 650 ஏக்கர் பரப்பளவில் 27 அடி உயரத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன விஸ்தரிப்பு திட்டத்தின் கீழ் உத்தமபாளையம் சுற்றியுள்ள 30 கிராமங்களில் 6048 ஏக்கர் விவசாய பூமி பாசனம்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

1980ம் ஆண்டு அணை கட்டி முடிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்குப் பிறகு 2021ம் ஆண்டு தமிழ்நாடு செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நடவடிக்கையின் பேரில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. 25 ஆண்டுகள் வறண்டு கிடந்த நிலையில் தற்போது நீர்வரத்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நிர்வரத்து காரணமாக 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டு ஆண்டுதோறும் 20,000 மரக்கன்றுகள் நட உள்ளனர். மரக்கன்று நடும் நிகழ்ச்சியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார். கடந்த 4 ஆண்டுகளாக கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்கு ஏற்றுவது மற்றும் மாரத்தான் விழிப்புணர்வு போட்டியை தன்னார்வ அமைப்பின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது, நேற்று 5வது ஆண்டாக அணைக்கு நீர் வரத்து சம்பந்தமாக நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும், அனையில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்கள் அணையின் பல்வேறு பகுதிகளில் 10,008 தீபம் ஏற்றி வழிபட்டனர்.

The post நிரந்தரமாக தண்ணீர் திறக்க வேண்டி வட்டமலை கரை அணையில் 10,008 தீபம் ஏற்றிய பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Vattamalai Karai Dam ,Vellakovil ,Dinakaran ,
× RELATED மாணவி கூட்டு பலாத்காரம் அதிமுக நிர்வாகிக்கு குண்டாஸ்