×

கள்ளப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் மீது குண்டாஸ்

கும்பகோணம்: கள்ளப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்ததாக ஊராட்சி மன்ற தலைவர் முருகன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட திருச்சி சிறையில் உள்ள முருகனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் அதிமுக ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு ஊராட்சி மன்ற தலைவரானவர் முருகன். முருகன் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

The post கள்ளப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் மீது குண்டாஸ் appeared first on Dinakaran.

Tags : Kundas ,Kallapuliyur panchayat council ,Kumbakonam ,president ,Murugan ,Panchayat Council ,Dinakaran ,
× RELATED கும்பகோணம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் இன்ஜின் தடம் புரண்டது