×

ஒசூர் அருகே குட்டியை ஈன்ற தாய் யானை உயிரிழப்பு: குட்டி யானைக்கு உணவுகள் வழங்கி உரிய மருத்துச் சிகிச்சை அளிப்பு

ஓசூர்: ஓசூர் அருகே ஜவாஹிரி வனப்பகுதியில் குட்டியை என்ற தாய் யானை பரிதாபமாக உயிரிழந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனச்சரகம், உளி பண்டா காப்புகாடு உறுகுட்டை சரக பகுதி உள்ளது. வனப்பகுதியில் நேற்று காலையில் உலிபெண்டா காப்பு காட்டிற்கு உட்பட்ட உர்குடை வனப்பகுதியில் பெண் யானை ஒன்று குட்டியை என்ற பிறகு மரணத்தை அடைந்தது.

தகவல் அறிந்த ஜவளகிரி வனச்சரக அலுவலர் (பொ) விஜயன் தலைமையிலான வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று உயிருடன் இருந்த குட்டி யானையை மீட்டனர். கால்நடை மருத்துவரின் பரிசோதனைக்கு பிறகு அதற்கு தேவையான உணவுகள் வழங்கி உரிய மருத்துவ சிகிச்சை அளித்து பாதுகாத்து வருகின்றனர். இறந்த பெண் யானையின் உடலை பிரேத பரிசோதனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் அதன் அறிக்கை கிடைத்த பின்பே தாய் யானையின் இறப்பிற்கு காரணம் தெரியவரும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post ஒசூர் அருகே குட்டியை ஈன்ற தாய் யானை உயிரிழப்பு: குட்டி யானைக்கு உணவுகள் வழங்கி உரிய மருத்துச் சிகிச்சை அளிப்பு appeared first on Dinakaran.

Tags : Hosur ,Kutiiyai ,Jawahiri forest ,Krishnagiri district ,Dhenkanikottai ,
× RELATED அகரம், பாலவாக்கம் பகுதிகளில் பொங்கல்...