×

வி.பி.சிங்குக்கு தாய் வீடு உத்தரப்பிரதேசம் என்றால் தந்தை வீடு தமிழ்நாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

சென்னை: வி.பி.சிங்குக்கு தாய் வீடு உத்தரப்பிரதேசம் என்றால் தந்தை வீடு தமிழ்நாடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். வி.பி.சிங்குக்கு சிலை அமைத்ததன் மூலம் நாம் அவருக்கு காட்ட வேண்டிய நன்றியை காட்டியுள்ளோம். ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை சாத்தியப்படுத்தி காட்டியவர் வி.பி.சிங். வி.பி.சிங்குக்கு சிலை அமைப்பதை திராவிட மாடல் அரசின் கடமையாக கருதுகிறோம். பிரதமர் பதவி போனாலும் பரவாயில்லை என்று சமூக நீதி கொள்கையில் உறுதியாக இருந்தவர் வி.பி.சிங் என்று கூறியுள்ளார்.

 

The post வி.பி.சிங்குக்கு தாய் வீடு உத்தரப்பிரதேசம் என்றால் தந்தை வீடு தமிழ்நாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்! appeared first on Dinakaran.

Tags : VP Singh ,Uttar Pradesh ,Tamil Nadu ,Chief Minister ,M. K. Stalin ,CHENNAI ,M.K.Stalin ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...