×

சென்னை வளசவரவாக்கத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட இளைஞர் திடீர் மரணம்; போலீசார் விசாரணை..!!

சென்னை: சென்னை வளசவரவாக்கத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் விஜய் திடீர் மரணமடைந்தார். சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த வாலிபர் விஜய், தொடர்ச்சியாக போதை பொருட்களுக்கு அடிமையாகி இருந்ததால் அவரது சகோதரர் விஜயை வளசவரவாக்கத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளார். இந்த மையத்தில் விஜய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சூழலில், தொடர்ச்சியாக தாக்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் விஜய்க்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் போதை மறுவாழ்வு மையத்தில் வேலை பார்த்த நிர்வாகிகள், ஒரு மருத்துவரை அழைத்து வந்து விஜய்க்கு தீவிர சிகிச்சை அளித்துள்ளனர்.

அப்போது விஜய் நலமுடன் இருப்பதாக மருத்துவர் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து விஜய்க்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வந்த சூழலில், மருத்துவர்கள் பரிசோதித்த போது அவரது உடல்நலம் நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் விஜய் நடிப்பதாக கூறி போதை மறுவாழ்வு மைய நிர்வாகிகள் விஜயை கடுமையாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு விஜய் மயக்கடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள், விஜயை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜய் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார்.

போதை மறுவாழ்வு மையத்தில் உள்ள சிசிடிவி பதிவு அழிக்கப்பட்டிருந்த நிலையில், சம்பவம் குறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் வினோத்குமார், கணக்காளர் க்ரூஸ், பணியாளர் அஜய் ஆகியோர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளனர். போதைக்கு அடிமையான விஜயை கடுமையாக தாக்கியதன் காரணமாக உயிரிழந்ததாக போலீஸ் விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் வினோத்குமார் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post சென்னை வளசவரவாக்கத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட இளைஞர் திடீர் மரணம்; போலீசார் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Valasavaravakkam, Chennai ,CHENNAI ,Vijay ,Adambakkam ,Chennai… ,Valasavaravakam, Chennai ,
× RELATED 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க விஜய் கட்சி இலக்கு