×

புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது; மக்கள் பீதி..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது. தமிழகத்தில் பருவமழை தொடங்கியிருப்பதால் மழைக்கால நோய்களும் அதிகரித்துள்ளன. குறிப்பாக சாதாரண சளி, காய்ச்சல்களுக்கு மத்தியில் டெங்கு காய்ச்சல், மலேரியா, டைப்பாய்டு போன்ற காய்ச்சல்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெங்கு காய்ச்சலும் அதிகமாக பரவி வருகிறது. தமிழக அரசும் மழைக்கால நோய்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், டெங்கு காய்ச்சல் காரணமாக புதுக்கோட்டையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 200ஐ தாண்டி இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. தற்போது ஒரே நாளில் 59 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், மதுரையில் நேற்று ஒரே நாளில் 13 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மதுரையில் டெங்கு பாதிப்பு 100ஐ தாண்டியது. கோவையில் ஒரே மாதத்தில் 10 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதியாகியுள்ளது. கோவையில் கடந்த 2 வாரங்களில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தினசரி 40 முதல் 50 பேர் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர். தற்போது வரை சுமார் 7 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு நலம் பெற்றுள்ளனர். இனி வரும் நாட்களில் டெங்கு பாதிப்பு குறையும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது; மக்கள் பீதி..!! appeared first on Dinakaran.

Tags : Pudukottai district ,Pudukottai ,Tamil Nadu ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...