×

ரசியல் சாசன நிர்ணய தினம் கடம்பூர் மலைப்பகுதியில் குழந்தைகள் தின விழா

 

சத்தியமங்கலம், நவ.27: சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூரில் நடைபெற்ற இந்திய அரசியல் சாசன நிர்ணய தின விழாவில் பழங்குடியின குழந்தைகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நவம்பர் 26ம் தேதி இந்திய அரசியல் சாசன நிர்ணய தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் பரண் அமைப்பு சார்பில் பழங்குடி ஊராளி குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இதில் இந்த அமைப்பு சார்பில் மலை கிராமங்களில் பள்ளி மாணவர்களுக்கான மாலை நேர வகுப்பில் பங்கேற்கும் மாணவ மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு நேற்று நடந்த குழந்தைகள் தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சத்தியமங்கலம் தாஸ் ஆட்டோ மொபைல்ஸ் உரிமையாளர் ஜான் ஆரோக்கியதாஸ் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். இதில் தமிழ்நாடு மக்கள் மன்றத்தின் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், சமூக ஆர்வலர் அம்புரோஸ், பரண் இணை இயக்குனர் உதய பிரகாஷ் ஆகியோர் இந்திய அரசியலமைப்பு சாசன தினத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.

இதைத்தொடர்ந்து பழங்குடி ஊராளி இன மாணவ மாணவிகளின் நடனம் மற்றும் நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்திய அரசியல் சாசன முகப்புரையை மாணவ மாணவியர் உறுதி மொழியாக ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் பரண் அமைப்பின் இயக்குனர்கள் கென்னடி, பணியாளர்கள் செல்வன், கோகுல், ரெக்ஸ், மாதேஷ், மதன், ரங்கசாமி, அனுராகவன், சகாயமேரி, லீமா, மகேஸ்வரி, கயல், புளோரா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பழங்குடியின பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் மாலை நேர வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post ரசியல் சாசன நிர்ணய தினம் கடம்பூர் மலைப்பகுதியில் குழந்தைகள் தின விழா appeared first on Dinakaran.

Tags : Constitution Day Children's Day Festival ,Kadampur Hills ,Sathyamangalam ,Indian Constitution Day ,Kadampur ,
× RELATED கடம்பூர் மலைப்பகுதியில் பழங்குடி மக்களின் பண்பாட்டுத்திருவிழா