×

திருக்கார்த்திகையையொட்டி அண்ணாமலையார் அலங்காரத்தில் சொக்கநாதர் திருமங்கலத்தில் சிறப்பு வழிபாடு

 

திருமங்கலம், நவ.27: திருக்கார்த்திக்கையையொட்டி, திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் சுவாமி அண்ணாமலையார் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில், நேற்று திருக்கார்த்திகையொட்டி காலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை சொக்கநாதர் திருவண்ணாமலை கோயிலில் எழுந்தருளியுள்ள அண்ணாமலையார் அலங்காரத்தில் காட்சியளித்தார்.

இதேபோல் அன்னை மீனாட்சியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். திருகார்த்திகையையொட்டி கோயில் வளாகத்தில் 501 திருவிளக்குகள் சிவலிங்கம் வடிவில் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்குகளை பக்தியுடன் ஏற்றினர். சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மீனாட்சி சொக்கநாதரை சுற்றுவட்டாரத்தினை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோயில் முன்பு சொக்கப்பனை எரியூட்டப்பட்டது. திருக்கார்த்திகையொட்டி மின்விளக்குகளால் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஜொலித்தது.

The post திருக்கார்த்திகையையொட்டி அண்ணாமலையார் அலங்காரத்தில் சொக்கநாதர் திருமங்கலத்தில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Sokkanatha Thirumangalam ,Annamalaiyar ,Thirukarthikai ,Tirumangalam ,Thirukarthika ,Swami Annamalaiyar ,Tirumangalam Meenakshi Sokkanathar Temple ,Thirumangalam… ,Thirumangalam ,
× RELATED திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார்...