×

தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம்

 

தக்கலை, நவ, 27: தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு கன்னியாகுமரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் தக்கலை அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் விஜயராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராஜேஷ் வரவேற்றார். செயலாளர் டோமினிக் ராஜ் அறிக்கை சமர்ப்பித்தார். பொதுச்செயலாளர் கனகராஜ் நிறைவுரையாற்றினார். துணைத் தலைவர் ரைமன்ட் நன்றி கூறினார்.

கூட்டத்தில், திருச்சி உரிமை மீட்பு மாநாட்டிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி கோரிக்கைகளுக்கு வலுசேர்த்த பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த மனித வள மேம்பாடு மற்றும் நிதி மேலாண்மை முறையினை நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தடங்கல்களுக்கு பொருத்தமான தீர்வினை விரைவாக ஏற்படுத்திட வேண்டும்.

அரசாணை எண் 148ப் படி எமிஸ் பதிவில் உள்ள ஆங்கில வழி இணை பிரிவு மாணவர்களையும் கணக்கிட்டு பணியிட நிர்ணயம் செய்திட வேண்டும். நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கான அங்கீகாரம் புதுப்பித்தல் மற்றும் ஆசிரியர்களின் பணப்பலன் சார்ந்த கோரிக்கைகளுக்கு கல்வி அலுவலகங்களில் ஏற்படும் தேவையற்ற காலதாமதத்தை சரி செய்திடத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Private School Teachers' Officers' Association ,Thakkalai ,Tamil Nadu Government Aided Private School Teacher Officer Federation Kanyakumari District ,Private School Teacher Officer Federation ,Dinakaran ,
× RELATED தக்கலை அருகே போலீஸ்- பொதுமக்கள் வாலிபால் போட்டி