×

மத்திய அரசு சான்றுடன் பெண்களுக்கு இலவச பேஷன் டிசைனிங் பயிற்சி

 

நாகர்கோவில், நவ. 27: இந்திய அரசுத்துறை அங்கீகாரம் மூலம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் எதிர்புறம் செயல்படும் இந்தியன் வங்கியின் மாடியில் இயங்கும் GKERD-CED தமிழ்நாடு மையத்தில் 40 நாட்கள் இலவச பேஷன் டிசைனிங் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. டிசம்பர் 1ம் தேதி தொடங்கும் இந்த பயிற்சி வகுப்பில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் தாழ்த்தப்பட்ட சமுகத்தினைச் சேர்ந்த 8ம் வகுப்பு படித்த பெண்கள் சேரலாம்.

இந்த பயிச்சி வகுப்பில் பெண்களுக்கான பேஷன் டிசைன் ஆடைகள் தயாரித்தல், ஆர்ரி ஒர்க்ஸ் செய்தல் போன்ற பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி முடிந்தவுடன் மத்திய அரசுத்துறை சான்றிதழ் வழங்கி தகுதியானவர்களுக்கு சுயதொழில் தொடங்க 35 சதவீதம் மானியத்துடன் கடன் பெறலாம். இதில் சேர விரும்புகிறவர்கள் டிசம்பர் 1ம் தேதிக்கு முன்பாக விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும். அல்லது இதன் ஒருங்கிணைப்பாளர் ரத்தினம் என்பவரின் செல்போன் 9345041515 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

The post மத்திய அரசு சான்றுடன் பெண்களுக்கு இலவச பேஷன் டிசைனிங் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Government of India ,Anna Bus Stand ,Dinakaran ,
× RELATED சிறார்கள் ஓட்டி வரும் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப வேண்டாம்