×

கலைஞர் நூற்றாண்டு விழாவில் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்

தேவகோட்டை, நவ.27: தேவகோட்டை நகராட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு காந்தி ரோடு நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த் குமார் தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் ஆணையாளர் பார்கவி துணைத்தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். 27வது வார்டு நகர்மன்ற உறுப்பினரும் திமுக நகர் செயலாளருமான பாலமுருகன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து முகாமை தொடங்கி வைத்தனர். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

முகாமில் மருத்துவ குழுவினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இசிஜி, ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. தொழுநோய் சுகாதாரத் துறையினர் சார்பில் தொழுநோய் விழிப்புணர்வு கண்காட்சி வைக்கப்பட்டது. அங்கன்வாடி ஊழியர்கள் கர்ப்பிணிப் பெண்கள் உட்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து பழ,கீரை வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த சிறப்பு முகாமில் நகர்மன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், நகராட்சி பணியாளர்கள்,மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவில் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Devakottai ,artist ,Devakottai Municipality ,Gandhi Road Municipal High School ,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்