×

ஆவணங்களின்றி இயக்கிய 23 வாகனங்களுக்கு அபராதம்

 

தாராபுரம், நவ.27: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வாகனங்களை தணிக்கை செய்ததில் ஒரு ஆவணங்கள், பாதுகாப்பு ஒளிரும் விளக்குகள் இன்றி கனரக வாகனங்களை இயக்கிய வாகனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்கோவை துணை போக்குவரத்து ஆணையரின் உத்தரவின் பேரில் தாராபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார். வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் திடீர் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது செல்லும் கனரக வாகனங்கள் தகுதி சான்று புதுப்பிக்கப்படாமல் இயங்கிக் கொண்டிருந்த வாகனங்கள் மற்றும் பின்புற அபாய விளக்கு எரியாமல் பழுதடைந்த நிலையில் இயங்கிய வாகனங்கள் ஓட்டுநர் உரிமம் இன்றியும், வாகன நடப்புக் காப்பீடு சான்று இன்றியும் வாடகை வாகனங்களுக்கான நடப்பு வரி கட்டாமல் ஏங்கிக் கொண்டிருந்த 85 வாகனங்கள் கண்டறியப்பட்டன. இதில் 23 வாகனங்களுக்கு ரூ.58 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

The post ஆவணங்களின்றி இயக்கிய 23 வாகனங்களுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Tarapuram ,Tarapuram, Tirupur district ,Dinakaran ,
× RELATED ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்...