×

சாத்தூர் ரயில் நிலையம் செல்லும் சாலையை உடனே சீரமைக்க வேண்டும்: மக்கள் கோரிக்கை

 

சாத்தூர், நவ.27: சாத்தூர் ரயில் நிலையம் செல்லும் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். சாத்தூர் ரயில்வேபீடர் சாலையில் இருந்து ரயில் நிலையம் செல்லும் சாலை ரயில்வே துறைக்கு சொந்தமானதாகும். ரயிலில் வந்து இறங்கும் பயணிகள் இந்த சாலை வழியாக பேருந்து நிலையத்திற்கு செல்கின்றனர். சாலை கடந்த பல வருடங்களாக குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. சாலையை புதுப்பிக்க கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் ரயில்வே நிர்வாகம் சாலையை புதுப்பிக்காமல் அலட்சிய போக்கை கடைபிடித்து வருகிறது. இதனால் தினசரி ரயில் நிலையம் வரும் பயணிகள் அவர்களை ஏற்றி வரும் வாகனங்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் சாலையின் நடுவில் தண்ணீர் தேங்கியுள்ளது. மழை நீர் தேங்கியுள்ளதால் சாலை சேறும் சகதியுமாக மாறி பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். தேங்கியுள்ள மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையை புதுப்பித்து மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

The post சாத்தூர் ரயில் நிலையம் செல்லும் சாலையை உடனே சீரமைக்க வேண்டும்: மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chhatur train station ,Chaturthi ,Chathur railway station ,Chathur Railwaybeider ,Chaturur Train Station ,Dinakaran ,
× RELATED பெரம்பலூரில் வல்லபவிநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா