×

விசிக சார்பில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பார்கள்: திருமாவளவன் தகவல்

சென்னை:சென்னை, அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார். அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம் சனாதனத்தை முறியடிப்போம் என்கிற உறுதிமொழியை ஏற்றனர். பினனர் தொல் திருமாவளவன் அளித்த பேட்டி:

டிசம்பர் 23ம் தேதி விசிக சார்பில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு நடைபெற உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், டி.ராஜா, சீதாராம் யெச்சூரி பங்கேற்க உள்ளனர். மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பு விடுக்க உள்ளோம். இந்தியா கூட்டணிவெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் தேசிய அளவில் இந்த மாநாடு தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியா கூட்டணி தலைவர்கள் மாநாட்டில் கண்டிப்பாக பங்கேற்பார்கள் என்றார்.

The post விசிக சார்பில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பார்கள்: திருமாவளவன் தகவல் appeared first on Dinakaran.

Tags : INDIA ALLIANCE ,VISICA ,THIRUMAWALAVAN ,Chennai ,Liberation Tigers Movement ,Prabhakaran ,Liberation Leopards Party ,Ashok, Chennai ,Vishaka: Thirumavalavan ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேற பாஜக அழுத்தம்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு