×

உச்ச நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவு

சென்னை: உச்சநீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கரின் சிலை திறக்கப்படுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவு : உச்சநீதிமன்ற வளாகத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் சிலை திறக்கப்படும். இந்தச் சிறப்புமிகு அரசமைப்புச் சட்ட நாளில், நமது அரசமைப்புச் சட்டத்தின் நிலைத்த மதிநுட்பத்தைப் போற்றுவோம்.

அரசமைப்புச் சட்டத்தின் உயர்பண்புகளை நீதித்துறையில் காப்பதற்காக அயராது பாடுபடும் நீதியின் பாதுகாவலர்களுக்கு நமது நெஞ்சார்ந்த வணக்கத்தைச் செலுத்துவோம். அண்ணல் அம்பேத்கருக்குச் சிலை வடிவிலான புகழ்வணக்கம் என்பது வெறும் நினைவுகூர்தல் அல்ல, அது அவர் வகுத்தளித்த நீதி, சமத்துவம் மற்றும் மக்களாட்சி மாண்புகளின் மீது நாம் கொண்டுள்ள பற்றுறுதியின் அடையாளச்சின்னம் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post உச்ச நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவு appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,Supreme ,Court ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,M. K. Stalin ,Twitter ,Supreme Court ,Supreme Court Complex ,
× RELATED அம்பேத்கர் உருவாக்கிய அரசியல்...