×

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம்

சென்னை: டிசம்பர் 17ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் திமுக மாவட்ட-மாநகர- மாநில இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை அன்பகத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

துணைச் செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். மாநாடு ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் கே.என்.நேரு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாட்டுக்காக முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து விவாதித்தார். மேலும் மாநாடு தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை இளைஞர் அணியினருக்கு அவர் வழங்கினார்.

The post உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK youth team ,Udhayanidhi Stalin ,Chennai ,2nd State Conference ,Pethanayakkanpalayam, Salem district ,
× RELATED விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை...